சேல்ஸ் இல்லாததால் கார் தயாரிப்பை குறைத்த மாருதி சுசுகி……

 

சேல்ஸ் இல்லாததால் கார் தயாரிப்பை குறைத்த மாருதி சுசுகி……

விற்பனை குறைந்தது மற்றும் கையிருப்பு அதிகரித்ததால் மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் தயாரிப்பை கடந்த மாதம் 15 சதவீதம் குறைத்தது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. நாட்டின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்துக்கும் அதே நிலைதான். மாருதி சுசுகி நிறுவனத்தின் கடந்த ஜூன் மாத விற்பனை நிலவரம் மோசமாக இருந்தது. 

மாருதி ஷோ ரூம்

கடந்த மாதத்தில் மாருதி சுசுகி 1.11 லட்சம் கார்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. 2018 ஜூன் மாதத்தில் 1.34 லட்சம் கார்களை மாருதி விற்பனை செய்தது. ஆக, கடந்த மாதத்தில் மாருதி நிறுவனத்தின் விற்பனை 17.2 சதவீதம் படுத்து விட்டது. தொடர்ந்து விற்பனை சரிவு கண்டு வருவதால் மாருதி சுசுகி நிறுவனம் தனது தயாரிப்பை குறைத்து வருகிறது. 

மாருதி சுசுகி

கடந்த ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்கள் தயாரிப்பை 15.6 சதவீதம் குறைத்தது. அந்த மாதத்தில் மாருதி நிறுவனம் 1.10 லட்சம் கார்களை மட்டுமே தயாரித்தது. ஆனால் சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 1.31 லட்சம் கார்களை தயாரித்து இருந்தது.

இந்தியாவின் மொத்த கார்கள் விற்பனையில் 50 சதவீத பங்களிப்பை கொண்டு இருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் நிலைமையே இப்படி இருக்கும்போது, மற்ற கார் நிறுவனங்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.