சேலைகள் விநியோகம்; ஆளுங்கட்சி மீது நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்!

 

சேலைகள் விநியோகம்; ஆளுங்கட்சி மீது நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்!

வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல் உள்ளிட்டவைகளை கண்காணித்து தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

தேனி: இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகளை துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்டோர் விநியோகிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வருகிற 18-ம் தேதி, 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்த தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல் உள்ளிட்டவைகளை கண்காணித்து தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

flying squad

இதற்காக, தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்த பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்பட்சமாக ரூ.108.75 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்வதில், பல்வேறு வியூகங்களை அனைத்துக்  கட்சிகளுமே பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதனை தடுக்க ஆங்காங்கே தொடர் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

money seized

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, சிமெண்ட் குடோனில் கட்டுக் கட்டாய் பணம், திமுக பிரமுகர் மீது சந்தேகம், விசிக பிரமுகர் காரில் பணம் பறிமுதல் என தேர்தல் பறக்கும் படையினர் சோதனைகளில் சிக்குவது எல்லாமே எதிர்க்கட்சியினர் மட்டும் தான்.

ஆனால், காவல்துறை உதவியுடன் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்களை விநியோகம் செய்கின்றனர். தேர்தல் ஆணையம் இதனை கண்டு கொள்ளாமல் பாரபட்சமாக செயல்படுகிறது என எதிர்க்கட்சியினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இது தொடர்பான ஆதாரங்களை சமர்பித்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை என அவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

two leaves sarees

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகளை துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ் ஆகியோர் தேனீ மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவிந்திரநாத் சார்பாக வாக்காளர்களுக்கு விநோயோகிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

o raja

முன்னதாக, நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று ஓபிஎஸ் வருவதை முன்னிட்டு ஆட்களை திரட்ட லாரி லாரியாக ஸ்டீல் குடங்கள் மற்றும் பரிசு பொருட்களை பொது இடங்களில் வைத்து அதிமுக-வினர் விநோயகம் செய்ததாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமனம்: ‘டிரான்ஸ்லேஷன்’ தங்கபாலுவுக்கு கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்!