சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் நடந்தது என்ன? – தி இந்து விளக்கம்

 

சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் நடந்தது என்ன? – தி இந்து விளக்கம்

துக்ளக் 50வது ஆண்டு விழாவில் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி பற்றி ரஜினி பேசியது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாகக் கொண்டு வரப்பட்டதாகவும் அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகவும், அதை தி.க-வினர் செருப்பால் அடித்ததாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

துக்ளக் 50வது ஆண்டு விழாவில் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி பற்றி ரஜினி பேசியது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாகக் கொண்டு வரப்பட்டதாகவும் அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகவும், அதை தி.க-வினர் செருப்பால் அடித்ததாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

periyaar

ஆனால், ராமர் படம் ஒட்டிய கட்அவுட் எடுத்துவரப்பட்டது. ராமர், சீதை சிலை ஆடையின்றி கொண்டுவரப்படவில்லை. அதற்கு செருப்பு மாலை அணிவிக்கவில்லை. பாரதிய ஜன சங்கம் கட்சியைச் சேர்ந்தவர்கள் செருப்பு வீசியதால் தி.க. தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு செருப்பால் அடித்தனர் என்று தி.க சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் இதை ரஜினி ஏற்கவில்லை. நான் கற்பனையாகக் கூறவில்லை. இந்து உள்ளிட்ட இதழ்களில் வந்ததை வைத்துதான் பேசினேன். அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியது இந்த விவகாரத்தை மேலும் பெரியதாக்கியது. இந்த நிலையில் அப்போது நடந்த சம்பவங்கள் பற்றி இந்து நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
1971ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியான தி இந்து நாளிதழில் சேலம் நிருபர் அளித்திருந்த செய்தியில், “பேரணியில் முருகனின் பிறப்பு, முனிவர்களின் தவம், மோகினி அவதாரம் குறித்து ஆபாசப் படங்கள் இடம் பெற்றிருந்தன. ஒரு வாகனத்தில் 10 அடி ராமர் படம் எடுத்துவரப்பட்டது. அதை பலரும் செருப்பால் அடித்துக்கொண்டிருந்தார்கள்.
பெரியார் ஊர்வலத்தின் பின்னால் ஒரு டிராக்டரில் அமர்ந்து வந்துகொண்டிருந்தார். மரத்தால் செய்யப்பட்டிருந்த ராமரின் கட்அவுட் ஒன்று ஊர்வலத்தின் முடிவில் தீவைத்து எரிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று, மற்றவர் மனைவி மீது ஆசை கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்திக்கு மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக இருந்த டி.வி.சொக்கப்பா எதிர்ப்பு தெரிவித்து தி இந்துவுக்கு கடிதம் எழுதினார். அதில், “திருமணமான ஒரு பெண், வேறு ஒருவரை விரும்பினால் அதை குற்றமாகக் கருதக்கூடாது என்றுதான் தீர்மானம் நிறைவேற்றினோம்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், தான் அளித்த தகவல் சரியானதுதான் என்று சேலம் நிருபர் விளக்கம் அளித்திருந்தார்.

beriyaar

மாநாட்டில் பேசிய பெரியார், “சிறுமியுடன் பாலியல் நடவடிக்கை மேற்கொள்வது தவறு. இது கடத்தல் மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால், நன்கு அறிவு முதிர்ச்சி அடைந்தவர்கள் வேறு ஒரு நபரின் மனைவியை விரும்புவது தவறு இல்லை. அந்த நபரின் மனைவியும் அவரை விரும்பினால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம். இதற்கு கணவன் எந்த வகையிலும் தடையாக இருக்கக் கூடாது” என்று பேசினார்.
இந்து மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
ஜனவரி 31, 1971ல் முதல்வர் கருணாநிதி இது குறித்து மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர், “தந்தை பெரியாருக்கு புரட்சிகரமாக சிந்திக்க எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், அவருடைய புரட்சிகர சிந்தனைகளை எல்லாம் எந்த அரசும் நடைமுறைப்படுத்த முடியாது. திராவிடர் கழகம் நடத்திய பேரணி பற்றி செய்தித்தாள்களில் படித்து தெரிந்துகொண்டேன். இந்த சம்பவங்களுக்காகவும் இதற்கு போலீசார் அனுமதி கொடுத்ததற்காகவும் வருத்தம் கொள்கிறேன். சில மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் உணர்கிறேன்” என்று கூறினார் என தெரிவித்துள்ளனர்.
இந்த‌ப் பேரணி குறித்து செய்தி வெளியிட்ட இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தினமணி நாளிதழ்களுக்கு எதிராக சொக்கப்பா அவதூறு வழக்கு தொடர்ந்ததா‌கவும், இது தொடர்பாக அவதூறு வழக்கு பதிவு செய்ய மெட்ராஸ் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு 1972 செப்டம்பர் 4ம் தேதி ரத்து செய்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.