சேலம் மாவட்ட ஆட்சியராக வலம்வந்த ரோஹிணி தற்போது என்ன ஆனார் தெரியுமா? 

சேலம் மாவட்ட ஆட்சியராக வலம்வந்த ரோஹிணி தற்போது என்ன ஆனார் தெரியுமா? 

தமிழ்நாடு இசை கவின் கலை பல்கலை. பதிவாளராக இருந்த ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு இசை கவின் கலை பல்கலை. பதிவாளராக இருந்த ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக ரோகிணி, கடந்த 28.8.2017 அன்று பொறுப்பேற்றார். இவர் கலெக்டராக பொறுப்பேற்றதில் இருந்து, மக்களோடு மக்களாக இணைந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தார். எந்த நேரத்தில் எந்தப் பிரச்சனை என்று, யார் சென்றாலும் முறையாக அணுகி, அதை தீர்த்து வந்தார். இரவு, பகல் என்று பார்க்காமல் செயல்பட்டு வந்தார். சேலம் மக்களின் குடும்ப உறுப்பினரைப் போலவே செயல்பட்டு வந்தார்.

rohini

சேலம் மாவட்ட ஆட்சியராக 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, பல அதிரடி நடவடிக்கைகள் திட்டங்களை செயல்படுத்தி வந்த ரோஹிணி தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவின் பேரில் தமிழ்நாடு இசைக் கல்லூரியின் பதிவாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.