சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட அறிவிப்ப்பானை ரத்து; உயர் நீதிமன்றம் அதிரடி!

 

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட அறிவிப்ப்பானை ரத்து; உயர் நீதிமன்றம் அதிரடி!

இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கி இருக்கிறது. புதிய சாலை அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும், கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்

சென்னை: சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை-சேலம் இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கி இருக்கிறது. புதிய சாலை அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும், கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனினும், சாலை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

chennai - salem express way

இந்த திட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, கடந்த 8 மாதங்களாக விசாரித்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து  தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

chennai - salem express way

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன், சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது. மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

தேர்தல் பயிற்சிக்காக வந்த ஆசிரியை மயங்கி விழுந்து பலி