சேலத்தில் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு! – கலெக்டர் அறிவிப்பு

 

சேலத்தில் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு! – கலெக்டர் அறிவிப்பு

கொரோனா பாதிப்பைத் தவிர்க்க ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. இந்த நிலையில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி இன்று பிற்பகல் 1 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1 மணி முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது என்று சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பைத் தவிர்க்க ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. இந்த நிலையில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி இன்று பிற்பகல் 1 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த முழு ஊரடங்கு திங்கட்கிழமை காலை வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

sa-raman

இதனால், மருந்தகம், மருத்துவமனை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன. காய்கறி, மளிகைக்கடைகள், இறைச்சிக் கடைகள் சனி, ஞாயிற்றுக்கிழமை திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஏற்கனவே அறிவித்திருந்தால் முன்கூட்டியே மக்கள் பொருட்கள் வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் பிற்பகல் 1 மணிக்கு மூடப்பட்ட பிறகு இந்த முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.