சேலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இறைச்சிக் கடை செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 

சேலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இறைச்சிக் கடை செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் அதிக அளவில் மீன், இறைச்சி கடைகளில் கூடுகின்றனர். இதனால் சமூக இடைவெளி என்பது மீறப்படுவதாக புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் அதிக அளவில் மீன், இறைச்சி கடைகளில் கூடுகின்றனர். இதனால் சமூக இடைவெளி என்பது மீறப்படுவதாக புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எங்கே இது போன்ற சமூக இடைவெளி மீறப்படுகிறது என்று கண்கொத்தி பாம்பாக செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் கேமராவும் கையுமாக அலைகின்றன. இதனால், மக்கள் மத்தியில் பதற்றம், குழப்பமான சூழ்நிலை ஏற்படுகிறது.

இதை தவிர்க்க சேலம் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை மீறி யாராவது திறந்தால் கடை பூட்டப்பட்டு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இறைச்சி கடைகள் பொது இடங்களில் திறக்கப்படுமா என்று எதுவும் குறிப்பிடவில்லை. சமூக இடைவெளியை மீறியதாக பல இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதும், கடந்த வாரம் பொது இடத்தில் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த வாரம் கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே, இறைச்சி அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் முடிவு வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.