‘சேற்றில் நிற்கும் நபர்’.. சிக்கிக் கொண்டார் என எண்ணி உதவிக்கரம் நீட்டிய உராங்குட்டான் குரங்கு !

 

‘சேற்றில் நிற்கும் நபர்’.. சிக்கிக் கொண்டார் என எண்ணி உதவிக்கரம் நீட்டிய  உராங்குட்டான் குரங்கு !

அவை 5 அறிவு கொண்டிருந்தாலும், 6 அறிவு கொண்ட மனிதனை விட ஒரு படி மேலாக இருக்கும் அவற்றின் செயல் நம்மை பிரமிக்க வைக்கிறது.

மனிதனுக்கு மனிதன் போட்டி பொறாமைகள் இருந்தாலும் விலங்குகளுக்கு அதெல்லாம் இருப்பதில்லை. அவற்றை நாம் இடையூறு செய்யாத வரை வாயில்லாத அந்த ஜீவன்களும் நமக்கு நன்மை மட்டுமே செய்யும். மனிதனுக்கு ஒரு ஆபத்து வந்தால் நாம் ஓடிச்சென்று உதவத் தயங்குவதைப் போல, விலங்குகள் தயங்குவதும் இல்லை, ஆபத்து நேர்ந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதும் இல்லை. அவை 5 அறிவு கொண்டிருந்தாலும், 6 அறிவு கொண்ட மனிதனை விட ஒரு படி மேலாக இருக்கும் அவற்றின் செயல் நம்மை பிரமிக்க வைக்கிறது.

ttn

இந்நிலையில், சகதியில் குப்பை அள்ளிக் கொண்டிருந்தவர் சேற்றில் சிக்கிக் கொண்டார் என்று எண்ணி உராங்குட்டான் குரங்கு ஒன்று உதவிக்கரம் நீட்டிய புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்தோனேசியாவில் உள்ள போர்நியோ என்னும் பகுதியில் ஒரு வனப்பகுதி இருக்கிறது. அங்கு இருக்கும் ஆறு ஒன்றில் குப்பை சேர்ந்துள்ளதால், அதில் பாம்பு உள்ளதாக உராங்குட்டான் பாதுகாப்பு அமைப்பினருக்குத் தகவல் வந்துள்ளது.

ttn

அந்த பாம்புகள் எந்த சமயம் வேண்டுமானாலும் குரங்குகளைத் தாக்கலாம் என்பதால் ஊழியர் ஒருவர் வந்து, அங்கிருந்த சேற்றில் இறங்கி குப்பையை அகற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உராங்குட்டான் குரங்கு ஒன்று அவர் சேற்றில் சிக்கியிருப்பதாக எண்ணி அவருக்கு உதவிக்கரம் கொடுத்துள்ளது. இதனை அங்கிருந்த நபர் ஒருவர் போட்டோ எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.