சேர்த்து வைத்துக் குடிக்கப் போகிறார்களா? – நெல்லை எலைட் கடையில் விற்றுத் தீர்ந்த மது வகைகள்

 

சேர்த்து வைத்துக் குடிக்கப் போகிறார்களா? – நெல்லை எலைட் கடையில் விற்றுத் தீர்ந்த மது வகைகள்

40 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்துள்ள நிலையில் குடிமகன்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

40 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்துள்ள நிலையில் குடிமகன்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மது விற்பனை நிறுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் குடிமகன்கள் சாதாரணமாக இருந்துவிட்டனர். ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை இருக்கும் என்று பிரதமர் அறிவித்தபோது துடித்துவிட்டார்கள். அதன்பிறகு ஊரடங்கு மே 4ம் தேதி வரை நீட்டிக்கவே குடிமகன்களின் நிலைமை பரிதாபமானது. இதை பயன்படுத்திக்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இதற்கிடையே ஊரடங்கை பயன்படுத்தி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கவே குடிமகன்கள் ஊரை காலி செய்துகொண்டு செல்வதுதான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கே வந்துவிட்டனர்.

crowd-gathered

அவர்களை காக்கும் வகையில் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது தமிழக அரசு. வெளிமாநிலத்துக்கு சென்று மது வாங்குவதை தடுக்க தமிழகத்தில் மதுக்கடை திறப்பதாக கூறிய தமிழக அரசு சென்னையில் மட்டும் மதுக்கடைகளைத் திறக்க தடை விதித்தது. இவர்கள் எல்லாம் பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கமாட்டார்கள் என்று அரசு நினைக்கிறதோ என்னவோ…
இன்று முதல் நாள் பல ஊர்களில் மூன்று, நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிமகன்கள் வரிசையில் நின்று மதுவை வாங்கிச் சென்றனர். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 96 மது பானக் கடைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக 89 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. இதனால், காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது.

tasmac-open

எலைட் மதுக்கடைகளில் மதுக்களின் விலை அதிகம். அதனால் அங்கு கூட்டம் குறைவாக இருக்கும் என்று நம்பி பலரும் நெல்லையில் உள்ள எலைட் கடைக்கு குவிந்தனர். ஆனால், மற்ற கடைகளை விட இங்கு கூட்டம் அதிகமாகவே இருந்தது. மீண்டும் வேறு டாஸ்மாக் கடையைத் தேடிச் சென்று வரிசையில் நின்று வாங்குவதற்கு பதில் இங்கேயே வாங்கிவிடலாம் என்று நினைத்து பலரும் வாங்கிச் சென்றனர். இதனால், நல்ல(?) சரக்கு எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டது. மட்டமான சரக்கு மட்டுமே கிடைக்கிறது. இருந்தாலும் அதுவாவது கிடைத்ததே என்று பலரும் வாங்கிச் செல்கின்றனர்.