சேரனின் திருமணம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

 

சேரனின் திருமணம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

இயக்குநர் சேரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திருமணம் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை: இயக்குநர் சேரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திருமணம் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் சேரன். இவரது நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனராக களமகறங்கியுள்ள திரைப்படம் திருமணம். இதில் தம்பி ராமையா மகன் உமாபதி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இதில் சுகன்யா,மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து, திருமணம் திரைப்படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சேரன் இயக்கும் படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் .