சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உள்ளே வர அனுமதி இல்லை – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

 

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உள்ளே வர அனுமதி இல்லை – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் போட்டி அட்டவணை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

சேப்பாக்கம் மைதானம்

ஐபிஎஸ் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் சென்னை  சேப்பாக்கத்தில் சென்னை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தும் ரத்து செய்யப்பட உள்ளது. மேலும் ரசிகர்களுக்கும் உள்ளே வர அனுமதி இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.