சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை வெட்டிய இளைஞர் மரணம்!

 

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை வெட்டிய இளைஞர் மரணம்!

சேத்துப்பட்டில் நடந்த கொலை முயற்சி சம்பவத்தில்  ஈடுபட்ட காதலன்  சுரேந்தர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சென்னை: சேத்துப்பட்டில் நடந்த கொலை முயற்சி சம்பவத்தில்  ஈடுபட்ட காதலன்  சுரேந்தர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

chetpet

ஈரோட்டைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவர் விடுதி ஒன்றில் தங்கியபடி சென்னையில் கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.  இவரை ஈரோட்டை சேர்ந்த சுரேந்தர் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்  சுரேந்தர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நண்பர்களுடன் சென்று தேன்மொழி வீட்டிற்கு சென்று அவரை பெண் கேட்டுள்ளார். சாதியை காரணம் சொல்லி  தேன்மொழியின் தந்தை அவரை திட்டி அனுப்பியதாகத் தெரிகிறது. சுரேந்தருடன் பேசக் கூடாது எனப் பெற்றோர் தேன்மொழியிடம் சத்தியம் வாங்கியுள்ளனர்.  இதையடுத்து தேன்மொழியும் சுரேந்தருடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் கடந்த ஆறு மாத  காலமாக சுரேந்தர்  மன உளைச்சலிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில்  திருமணத்திற்குச் செல்வதாகக் கூறி விட்டு சென்னைக்கு வந்துள்ளார் சுரேந்தர். 

chetpet

இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி  சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில்  சுரேந்தருக்கும்  தேன்மொழிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சுரேந்தர் தேன்மொழியை குத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயன்றார். இதில் படுகாயம் அடைந்த தேன்மொழி  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சுரேந்தர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும்  சிகிச்சை பெற்று வந்தனர்.  தேன்மொழி உடல்நிலை தேறி வந்த நிலையில் சுரேந்தர் சுயநினைவின்றி இருந்து வந்தார். 

chetpet

இந்நிலையில்  சுயநினைவில்லாமல்  ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நிலையில்  7 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சுரேந்தர் நேற்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேந்தர் உயிரிழந்த செய்தியால் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின்பு வார்த்து உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

முன்னதாக அவர் மீது பதிவான கொலை முயற்சி வழக்கானது  நிலுவையில் உள்ள நிலையில் சுரேந்தர் இறந்துவிட்டதால் விரைவில்  நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.