சேட்டை செய்த மாணவர்கள்… பெஞ்சில் கட்டிப்போட்ட தலைமையாசிரியர்! – நெட்டிசன்கள் கொந்தளிப்பு

 

சேட்டை செய்த மாணவர்கள்… பெஞ்சில் கட்டிப்போட்ட தலைமையாசிரியர்! – நெட்டிசன்கள் கொந்தளிப்பு

ஆந்திராவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் சண்டைபோட்டுக்கொண்ட இரண்டு மாணவர்களை பெஞ்சோடு சேர்த்து கட்டிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியில் மாசானம்பேட்டா என்ற இடத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சார்ந்த இரண்டு மாணவர்கள் சண்டை போட்டுள்ளனர்.

ஆந்திராவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் சண்டைபோட்டுக்கொண்ட இரண்டு மாணவர்களை பெஞ்சோடு சேர்த்து கட்டிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியில் மாசானம்பேட்டா என்ற இடத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சார்ந்த இரண்டு மாணவர்கள் சண்டை போட்டுள்ளனர். மேலும் வகுப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து சேட்டை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை ஶ்ரீதேவி, அந்த மாணவர்களை மாணவர்கள் அமரும் பெஞ்சில் கட்டிப்போட்டு உட்கார வைத்துள்ளார்.

studnets

இதை பள்ளியைச் சார்ந்த ஆசிரியர் ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது.
தலைமை ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனந்தபூர் மாவட்ட ஆட்சியர், மாநில கல்வித் துறைக்கு ஆந்திர மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.