செஸ் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும்!

 

செஸ் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும்!

2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான எக்சைஸ் வரி மற்றும் சாலை மற்றும் அடிப்படைகட்டமைப்பு செஸ் வரி உயர்வால் அவற்றின் விலை உயரும்.

2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் எக்சைஸ் வரி மற்றும் சாலை மற்றும் அடிப்படைகட்டமைப்பு செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளது. (ஒரு லிட்டர்) பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதலாக தலா ரூ.1 சிறப்பு கூடுதல் எக்சைஸ் வரி மற்றும் சாலை மற்றும் அடிப்படைகட்டமைப்பு செஸ் வரி விதிக்கப்படும். இதனால் இனி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். 

வரி

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரியை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தும். வியாபாரிகள் அதனை சமாளிக்க பொருட்களின் விலையை உயர்த்துவார்கள். எப்படி பார்த்தாலும் செஸ் வரியால் கடைசியில் பாதிக்கப்படுவது யார் என்று பார்த்தால் சாமானிய மக்களாகதான் இருப்பார்கள்.

பெட்ரோல் பங்கு

எனவே பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி விதிப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்தால் நல்லது என்று பலரும் கருத்து கூறிவருகின்றனர்.