செவ்வாய் கிரக பாதிப்புகளில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி?

 

செவ்வாய் கிரக பாதிப்புகளில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி?

செவ்வாய் கிரகத்தின் பாதிப்பில் இருந்து நம்மை நாமே காத்துகொள்வது எப்படி என்பதினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

ஜோதிடத்தில் செவ்வாயினை நமது உடலாக நினைத்து அதற்கு உண்டான பலன்களை கூறுவார்கள் ஜோதிடர்கள் . ஒரு ஜாதகத்தில் செவ்வாய் எந்த ராசியில் உள்ளது அந்த ராசிக்கு அதிபதி யார், செவ்வாய் நிற்கின்ற நட்சத்திரம் எது என்பதை மனதில் வைத்து பலன் கூற வேண்டும் என்று ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது.

sevvai

ஒருவரின் உடலில் செவ்வாய் பாதிக்கபட்டால், அந்த உடல் சூடு மற்றும் பித்த நோய்களை உருவாக்குகிறது. தலை சுற்றல், வாந்தி, மயக்கம், உடல் நடுக்கம் போன்றவை செவ்வாய் பாதிக்கபட்டால் ஏற்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்துக்கு, சந்திரனுக்கு அல்லது சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ல் இருக்க செவ்வாய் பாதிப்புகள் உண்டாகிறது என்கிறது ஜோதிடம். செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம் மேலும் இவரே கால புருஷ சக்கரத்தின் லக்ன அதிபதி மற்றும் 8 என்ற அசுப ஸ்தானத்தின் அதிபதி.

muruganfgg

செவ்வாய் 4 இடமான கடகம் என்ற நீர் ராசியில் நீசம் பெறுவார் என்கிறது ஜோதிடம் இதன் மூலம், செவ்வாய் பாதிப்புகள் சந்திரன் மூலம் ஆதாவது நீர் மூலம் தீர்க்கலாம் என்பதை நம் வாழ்கையில் அறியலாம். ஆதாவது உடல் சூட்டை தணிக்க, நீர் முக்கிய காரணி என்பது எல்லோரும் அறிந்ததே.

இங்கே செவ்வாய் என்பது பித்தம் ஆதாவது நெருப்பு உடலில் உருவாக்கும் காரகத்துவம் கொண்டது. உடலில் சக்தி ஓட்டம் நெருப்பு ஆதாவது அனல் அல்லது வெப்பம் என்ற நிலையில் எடுத்து செள்ளப்டுகிறது என்பது தற்போதைய நவீன விஞ்ஞானம் ஒத்துகொள்கிறது.

எனவே உடலில் ஏற்படும் சூட்டு வியாதிகளுக்கும், இரத்தம் அசுத்தம் பெறுவதால் ஏற்படும் கண் மற்றும் தோல் வியாதிகளுக்கும், உயர் மற்றும் குறைவான ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும் செவ்வாய் ஒரு காரணி. இதில் இருந்து உடலில் செவ்வாய் காரகத்துவம் என்பது நெருப்பு அல்லது பித்த வடிவில் இருப்பதாய் ஜோதிடம் மூலம் அறியலாம்.

sevvai

செம்பு என்பது செவ்வாய் என்ற கிரகத்துக்கான உலோகம். நீர் என்பது சந்திரன் காரகதுவதில் ஒன்று. சித்த மருத்துவத்தில் பித்தம் என்ற நெருப்பை கட்டுபடுத்துவதில் செம்பின் பங்கு அளப்பரியது.

எனவே மேற்கண்ட உடல் உபாதைகள் உள்ளவர்கள், ஒரு நாள் இரவு முழுவதும் செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை, அதிகாலையில் அருந்தும் பழக்கம் கொண்டால், செவ்வாய் பாதிப்புகள் விரைவில் விலகி நலம் பெறுவார்கள். மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளும் விரைவில் சரியாகும் என்பது அனுபவ உண்மை.