செவ்வாய் கிரகத்துல காதலியோட பேரை எழுதலாம்… செம த்ரில்லிங் வாய்ப்பு… !

 

செவ்வாய் கிரகத்துல  காதலியோட பேரை எழுதலாம்… செம த்ரில்லிங் வாய்ப்பு… !

மலை உச்சியிலும், மரக்கிளைகளிலும் காதலியின் பெயரை எழுதி, ஹார்ட்டீன் வரைந்து அம்பு குறி விட்டு கொண்டிருப்பவர்களுக்கும்,  பேரன் பேத்தியை எல்லாம் பார்த்த பிறகும் பழைய காதலியை மறக்க முடியாமல் மனசுக்குள்ளேயே மருகி கொண்டிருப்பவர்களுக்கும் அருமையான வாய்ப்பை தருகிறது நாசா.

மலை உச்சியிலும், மரக்கிளைகளிலும் காதலியின் பெயரை எழுதி, ஹார்ட்டீன் வரைந்து அம்பு குறி விட்டு கொண்டிருப்பவர்களுக்கும்,  பேரன் பேத்தியை எல்லாம் பார்த்த பிறகும் பழைய காதலியை மறக்க முடியாமல் மனசுக்குள்ளேயே மருகி கொண்டிருப்பவர்களுக்கும் அருமையான வாய்ப்பை தருகிறது நாசா. உங்கள் காதல் நிரந்தரமானது, அழிவில்லை என்று உறுதியாய் நம்பும் நீங்கள், யுகங்களைத் தாண்டியும் உங்களது பெயர் நிலைத்திருக்கிற மாதிரி செவ்வாய் கிரகத்துல உங்களோட பேரை வைக்கலாம். 

NASA

யெஸ், அப்படியே கற்பனையில மிதக்காம, நாளைக்குள்ள கீழே இருக்குற இணையதள முகவரியில உங்களோட பெயரை பதிவு பண்ணீங்கன்னா, பதிவு செய்கிற பெயர்கள் எல்லாமே செவ்வாய் கிரகத்துல இடம்பெறும். 

Mars

நிலவை ஆராய்ச்சி செய்துக்கிட்டு வர்ற மாதிரியே செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ந்து வருகிறார்கள். அப்படி, செவ்வாய் கிரகத்தின் காலநிலை,  புவியியல், மண் மாதிரிகளை சேகரித்தல் மற்றும் நுண்ணுயிரிகளின் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக `மார்ஸ் 2020’ என்ற விண்வெளி பயணத்திட்டத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அடுத்த வருஷம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான முயற்சிகள்ல இப்போதிலிருந்தே இறங்கியிருக்கு. அப்படி, அடுத்த வருஷம் ஜூலை மாசம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ரோவர், 2021ம் ஆண்டு பிப்ரவரியில் அங்கு தரையிறங்கும் என  எதிர்பார்க்கப்படுது.

Mars 2020 rover

செவ்வாய்க்கு அனுப்பப்படும் ரோவரில், கூடவே பல பொருட்களோட எக்ஸ்ட்ராவாக ஒரு மைக்ரோ சிப்பையும் வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. அப்படி வைக்கப்பட உள்ள  மைக்ரோசிப்பில் உலகெங்கும் உள்ள பொதுமக்கள் பெயர்களை இடம் பெற செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இதில் உங்கள் பெயர் இடம் பெற வேண்டுமா?

Mars 2020 rover

அதற்கு நீங்கள் நாளைக்குள்  உங்கள் பெயரை http:mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுவரை 1 கோடி பேர் தங்கள் பெயரை செவ்வாய் கிரகத்தில் இடம் பெற பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இப்படி பதிவு செய்யப்படும் பெயர்களை நாசா சிலிகான் சிப்பில் பதிவு செய்து கொள்ளும். பின்னர் அடுத்த ஆண்டு அனுப்பப்படும் ரோவரில் இந்த சிப் கொண்டு செல்லப்பட்டு  செவ்வாய் கிரகத்தில் வைக்கப்படும்