செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் புற்றுநோய் நிச்சயம்! ஆய்வில் வெளியான பகீர் தகவல் 

 

செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் புற்றுநோய் நிச்சயம்! ஆய்வில் வெளியான பகீர் தகவல் 

செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். செந்நிறகோளான செவ்வாயில் கால் பதிக்க வேண்டும் என்பது நாசாவின் கனவு திட்டம்.

செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். செந்நிறகோளான செவ்வாயில் கால் பதிக்க வேண்டும் என்பது நாசாவின் கனவு திட்டம். அதாவது 2035 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த நாசா திட்டமிட்டு வருகிறது. செவ்வாய் கோளின்  மேற்புறத்தில் நீர், மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கான பல மூலக்கூறுகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய் கிரகம்

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறினால் சிறிது காலத்திலேயே சுயநினைவை இழந்து டிமென்சியா எனும் நாட்பட்ட மனநோய்க்கு ஆளாக கூடும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்பவர் வரலாற்றில் இடம் பிடிப்பார் எனினும், முன்பு யாரும் எதிர் கொள்ளாத சுகாதாரப் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள அபாயகரமான கதிர்வீச்சு புற்றுநோய், அறிவாற்றல் குறைப்பாடு, இதய பிரச்னை உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தகுந்த பாதுகாப்போடு ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அங்கே போய் நிலம் வாங்கி செட்டில் ஆகலாம் என்பவருக்குலாம் செவ்வாய் கிரகம் செட்டே ஆகாது.