செல்ல பிராணிக்காக ஒன்றரை லட்சத்திற்கு மேல் செலவு செய்த பிரபல நடிகை!

 

செல்ல பிராணிக்காக ஒன்றரை லட்சத்திற்கு மேல் செலவு செய்த பிரபல நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ரா தனது செல்ல பிராணிக்காக ஒன்றை லட்சம் மேல் செலவு செய்து புதிய வீடு அமைத்துள்ளதாக கூறியுள்ளனர்

சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தனது செல்ல பிராணிக்காக ஒன்றை லட்சம் மேல் செலவு செய்து புதிய  வீடு அமைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

பாலிவுட் திரையுலகில் பல முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ்யை காதலித்து இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை தொடர்ந்து தற்போது ‘ஸ்கை இஸ் பிங்’ என்கிற இந்தி படத்திலும்,  ‘இஸ் நாட் ரொமான்டிக்’ என்கிற ஹாலிவுட் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

priyanka chopra

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா வளர்த்து வரும் செல்ல நாய் டயானா பிரபலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. அதன் பெயரில் டைரிஸ் ஆஃப் டயானா என்று இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளார். இதையும் 93 ஆயிரத்திற்கு மேல்பின்தொடர்கின்றனர். இவர் எப்போதும் செல்ல நாயுடன் அதிக நேரம் செலவு செய்வதும், ஷாப்பிங் செல்லும்போது கூட அழைத்து செல்வதையே வழக்கமாக செய்து வருகிறார். 

priyanka

தற்போது அந்த செல்ல பிராணிக்கு விசேஷமாக வடிவமைத்த உடையை வாங்கி அணிவித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அது பயணிக்க ட்ராவல் பேக், ஒன்றையும் வாங்கியிருக்கிறார். அதற்குள் புதிய உடையுடன் அவர் செல்ல பிராணி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.  மேலும் டயானாவுக்கு ட்ராவல் வீட்டை அழகாக வடிவமைத்து கொடுத்த  மிமிக்கு நன்றி என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.  இந்த உடை மற்றும் ட்ராவல் வீடு செலவு மட்டும் ரூ.1 .50 லட்சம் என்று கூறப்படுகிறது.