’செல்லூர் ராஜூ இன்னும் சசிகலாவின் படத்தைத்தான் சட்டைப்பையில் வைத்திருக்க்கிறாராம்’-வெடிகுண்டு வீசும் டிடிவி குரூப்…

 

’செல்லூர் ராஜூ இன்னும் சசிகலாவின் படத்தைத்தான் சட்டைப்பையில் வைத்திருக்க்கிறாராம்’-வெடிகுண்டு வீசும் டிடிவி குரூப்…

”அதிமுக தலைவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சசிகலா மீது விசுவாசத்துடன் தான் இருகின்றனர். ஒரே தலைமயின் கீழ் செயல்பட வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்கிறோம்” என அமமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

”அதிமுக தலைவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சசிகலா மீது விசுவாசத்துடன் தான் இருகின்றனர். ஒரே தலைமயின் கீழ் செயல்பட வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்கிறோம்” என அமமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு ஓபிஎஸ் – எடப்பாடி இணைந்த பிறகு ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் இரண்டு தரப்பினரும் தனித்தனியாகவே செயல்பட்டு வருகின்றனர். அரசு நிகழ்ச்சிகளில் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே திட்டங்களை தொடங்கிவைக்கிறார். இந்தநிலையில், அதிமுகவில் நீண்டகாலமாக உள்ள உட்கட்சி பூசலை வெளிப்படுத்தும் வகையில் நேற்று மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

pugalenthi

 அப்போது அவர், ‘அதிமுகவில் ஜெயலலிதாவின் ஆளுமை யாருக்கும் இல்லை. ஆளுமை மிக்க ஒருவரது தலைமையின் கீழ் அதிமுக வரவேண்டும். இரட்டை தலைமை கூடவே கூடாது. இடைத்தேர்தல் தோல்விக்கு இந்த இரட்டை தலைமையே காரணம். அதிமுகவிற்கு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஓபிஎஸ், எடப்பாடி அணி முழுமையாக இணையவில்லை. அதிமுகவிற்கு ஒரே தலைமை என்ற கருத்தில் உறுதியாக உள்ளேன். இதற்காக என்னை அதிமுகவில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை’ என்று திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் அதிமுகவில் உள்கட்சி பூசல் இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இது குறித்து பேட்டி அளித்த அமமுகவின் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி,’அதிமுக ஒரே தலைமையின் கீழ் தான் செயல்பட வேண்டும் என்பதையே நாங்களும் வலியுறுத்துகிறோம். ராஜன் செல்லப்பா சொல்வது நிச்சயமாக நடக்கும். ராஜன் செல்லப்பா என்ன சொல்கிறார் என்பது எனக்கு புரிகிறது. அவர் சொல்வதை தான் நாங்கள் வெளியில் இருந்து சொல்கிறோம். செல்லூர் ராஜூ இன்னும்  கூட சசிகலாவின் படத்தை தனது சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தான் இருக்கிறார். அவர் கூறியபடி அதிமுகவிற்கு ஒரே தலைவர் என்ற கருத்து வரவேற்கத்தக்கது. அது ஒருநாள் நடக்கும். அதிமுகவினர் இன்னும் நன்றி விசுவாசமாக பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் சசிகலா தலைமையின் கீழ் செயல்பட அனைவரும் வருவார்கள்’என்று எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்துவைத்திருக்கிறார்.