செல்போன் விளையாட்டில் பதற்றம்.. உயிரிழந்த இளைஞர்!

 

செல்போன் விளையாட்டில் பதற்றம்.. உயிரிழந்த இளைஞர்!

கோயம்புத்தூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (21). இவர் இம்மாதம் 3ஆம் தேதியன்று காலை 11 மணியளவில், தன்னுடைய வீட்டின் கதவை பூட்டி கொண்டு வீட்டினுள்ளே பப்ஜி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

கோயம்புத்தூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (21). இவர் இம்மாதம் 3ஆம் தேதியன்று காலை 11 மணியளவில், தன்னுடைய வீட்டின் கதவை பூட்டி கொண்டு வீட்டினுள்ளே பப்ஜி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அவரது பெற்றோர்கள் மகனை வீட்டில் விட்டு விட்டு, வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில், அன்று மதியம் தொலைபேசியில் அவர்கள் மகனைத் தொடர்புக் கொள்ள முயற்சித்துள்ளனர். வீட்டின் தொலைப்பேசி அடித்துக் கொண்டே இருந்துள்ளது. மகன் போனை எடுக்கவில்லை. 

sahul

அதன் பின்னர் சென்ற வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அவர்களது மகன் சாகுல் ஹமீது வாயில் நுரை தள்ளிய படி, நாக்கை கடித்தவாறு சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அரசு மருத்துவமனையில் அவரைக் கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி வலிப்பு வந்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சாகுல் ஹமீதின் உறவினர்கள் பேசும் போது, செல்ஃபோனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போது சாகுலுக்கு பதற்ற நிலை வந்து அதனால் வலிப்பு வந்து உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறினர்.