செல்போன் ரேடியேஷன் அதிகம்… பீதியைக் கிளப்பி செல்போன்களை திருடிய நபர் கைது!

 

செல்போன் ரேடியேஷன் அதிகம்… பீதியைக் கிளப்பி செல்போன்களை திருடிய நபர் கைது!

சென்னையில் பெண்கள் ஹாஸ்டலை குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்டுவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பெண்கள் ஹாஸ்டலை குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்டுவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர், ஓ.எம்.ஆர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் செல்போன் திருடுபோவதாக அடிக்கடி போலீசாருக்கு புகார் வந்துகொண்டே இருந்தது. ஆனால், யார் அந்த ஆசாமி என்று கண்டறிய முடியாமல் போலீசார் திணறிவந்தனர். 

theif

பெண்கள் ஹாஸ்டலில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்தபோது ஹெல்மெண்ட் அணிந்தபடி ஒரு நபர் வந்து சென்றது தெரிந்தது. அவர் வந்து சென்ற பிறகே செல்போன் திருட்டு நடந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக ஹாஸ்டல் உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், “அதிகாலை நேரத்தில் நிறைய பெண்கள் வேலைக்கு புறப்படத் தயாராகி வருவார்கள். அறையை ஷேர் செய்து தங்கும் பெண்கள் சிலர் தூக்கத்தில் இருப்பார்கள்.

theif

இதனால், பல அறைகள் பூட்டப்படாமல் திறந்தே இருக்கும். அந்த பரபரப்பான நேரத்தில் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு நபர் வந்தார். தான் தனியார் செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து வருவதாகவும் இந்த பகுதியில் உள்ள டவரில் அதிக கதிர்வீச்சு இருப்பதாக புகார் வந்துள்ளது என்றும் அதை செக் செய்ய வந்துள்ளதாக கூறுவார். மேலும், கையில் உள்ள கருவியைக் காட்டி இங்கு செல்போன் டவர் ரேடியேஷன் அபாய கட்டத்தைக் காட்டுகிறது என்றும் சொல்லியுள்ளார். இதனால் ஹாஸ்டல் நிர்வாகிகள் பயந்துபோய் அவரை உள்ளே அனுமதித்துள்ளனர். ரேடியேஷன் அதிகமாக உள்ளதால் அதை சரி செய்யும் வரை வெளியே வர வேண்டாம் என்று கூறி உள்ளே அறைக்குள் பத்திரமாக இருக்கச் சொல்வாராம். மேலும், அவர் வைஃபை கருவியை ஆஃப் செய்யுங்கள். நான் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறுவாராம். இதை நம்பி எல்லோரும் உள்ளே சென்ற பிறகு சௌகரியமாக திறந்திருக்கும் அறைகளில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

theif

இந்த தகவல் அடிப்படையில் பெண்கள் ஹாஸ்டல்களுக்கு போலீசார் எச்சுக்கைவிடுத்திருந்தனர். யாராவது சந்தேகப்படும்படி வந்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தனர். இந்த நிலையில், நொளம்பூர் பகுதியில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் இருந்து போலீசாருக்கு போன் வந்தது. சந்தேகப்படும்படி நபர் வந்துள்ளதாகவும் அவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். உடனே, விரைந்து சென்று அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை செய்தபோது, அவருடைய பெயர் பாலாஜி என்றும் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. மேலும், இத்தனை காலம் லேடீஸ் ஹாஸ்டலில் திருட்டில் ஈடுபட்டுவந்த நபர் இவர்தான் என்பதும் தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, திருடிய மொபைல் போன்களை பல்லாவரத்தில் உள்ள சாகுல் என்பவரிடம் விற்றது தெரிந்தது.

theif

விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு ஸ்டார் ஹோட்டல்களில் ஆடம்பரமாக செலவு செய்துவந்ததும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து பாலாஜி மற்றும் சாகுலை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 34 ஸ்மார்ட் போன்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “பல ஆண்டுகளாக பாலாஜி என்ற நபர் மொபைல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது செம்மஞ்சேரி போலீசில் வழக்கு உள்ளது. இதனால், அந்த பகுதியில் கொள்ளையடிப்பதை நிறுத்தவிட்டு, அண்ணாநகர் பகுதியில் கைவரிசையைக் காட்டி வந்துள்ளார். முதலில் லேடிஸ் ஹாஸ்டல் உள்ள பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள், கடைகளில் லேடிஸ் ஹாஸ்டல் பற்றிய விவரத்தைச் சேகரிப்பார்.

theif

பிறகு கதிர் வீச்சு அபாயம் என்று பீதியைக் கிளப்பி, பூட்டாத அறைகளில் உள்ள மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார். அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளோம். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் எத்தனை லேடீஸ் ஹாஸ்டல்களில் திருடினார், எவ்வளவு பொருட்கள் திருடினார் என்ற தகவல் முழுமையாகத் தெரியவரும்” என்றார்.