‘செல்போன் கொடுத்தால் போதை மாத்திரை’ : டிக் டாக்கில் வீடியோவால் சிக்கிய 9 சிறுவர்கள் கைது!

 

‘செல்போன் கொடுத்தால் போதை மாத்திரை’ : டிக் டாக்கில் வீடியோவால் சிக்கிய  9 சிறுவர்கள் கைது!

அவர்களாகவே டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு போலீசில் வசமாக சிக்கி கொண்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி ராகேஷ் என்ற ஐடி ஊழியரை தாக்கி 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று செல்போன் பறித்துள்ளது. இதேகும்பல் திநகரிலும் கைவரிசை காட்டியுள்ளது. இதனால் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் அவர்களை தேடி வந்தனர். ஆனால்  அவர்களாகவே டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு போலீசில் வசமாக சிக்கி கொண்டனர்.

ttn

வழிப்பறியில் ஈடுபட்ட  அவர்கள் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. 9 பேர் கொண்ட கும்பலாக செய்யப்பட்டு வந்த இவர்கள் திநகர் முதல் செங்குன்றம் வரை செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். திருடிய செல்போனைகளை கடைகளில் கொடுத்து பணத்திற்கு பதிலாக போதை மாத்திரைகளைப் பெற்று வந்துள்ளனர். போதை மாத்திரைக்கு  அடிமையானதால் தான் இவர்கள் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போதை மாத்திரைகளைக் கொடுத்தது யார் போன்ற தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.