செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு- நிர்மலா சீதாராமன் 

 

செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு- நிர்மலா சீதாராமன் 

சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி வரி சதவீதத்தை மாற்றுவது குறித்து மத்திய அரசு அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் சில பொருட்களின் வரி விதிப்பை மாற்ற வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

nirmala sitharaman

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 18%ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்போன்களின் குறிப்பிட்ட பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 12 சதவீதத்தில் இருந்து 18% ஆக உயர்த்தப்படும். மேலும் செருப்பு, ஜவுளி, உரம் தொடர்பான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்படவுள்ளது” என தெரிவித்தார்.