செல்போன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 18 சதவீதமாக உயர்வு?

 

செல்போன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 18 சதவீதமாக உயர்வு?

இந்தியாவில் செல்போன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 18 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி: இந்தியாவில் செல்போன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 18 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி வரி சதவீதத்தை மாற்றுவது குறித்து மத்திய அரசு அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் சில பொருட்களின் வரி விதிப்பை மாற்ற வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ttn

அதன் அடிப்படையில் செல்போன்களுக்கு வரி விதிப்பை 18 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது செல்போன்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செருப்பு, ஜவுளி, உரம் தொடர்பான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் ஜி.எஸ்.டி வரி கணக்கு தாக்கலை எளிதாக செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.