செல்போனை சார்ஜ் போட்டு.. பாட்டு கேட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!! உஷாரா இருங்க..

செல்போனை சார்ஜ் போட்டு.. பாட்டு கேட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!! உஷாரா இருங்க..

செல்போனை சார்ஜ் போட்டபடி, சிறுமி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது பேட்டரி வெடித்து உயிரிழந்த சம்பவம் கஜகஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

கஜகஸ்தானில் உள்ள பாஸ்டோப் என்னும் கிராமத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமியான ஆலுவா அசெட்கிஸி அப்ஸல்பெக் என்பவர் பொதுவாக இரவு நேரங்களில் இசை மற்றும் பாடல்கள் கேட்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 

teen girl

இதனால் படித்த நேரம் போக இரவு நேரங்களில் பெற்றோர் அந்த சிறுமிக்கு தங்களது செல்போன்களை கொடுத்து பாடல்களை கேட்க அனுமதித்துள்ளனர். இந்த பழக்கத்தை வாடிக்கையாக கொண்டிருந்த சிறுமி ஆலுவா, நேற்றைய தினம் இரவு செல்போனை சார்ஜ் போட்டபடி ஹெட் போன் போட்டுக் கொண்டு பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தார். 

இதைக்கண்ட சிறுமியின் பெற்றோர் நீண்ட நேரம் ஆகிவிட்டது.. செல்போனை அணைத்து விட்டு விரைவில் உறங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். தூக்கம் வரவில்லை, சிறிது நேரம் பாடல்கள் கேட்டுவிட்டு தூங்கி விடுவதாக ஆலுவா கூறியிருக்கிறார். ஆனால் காலையில் எழுந்து பார்க்கையில், ஆலுவா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அருகில் செல்போன் பேட்டரி வெடித்து இருப்பதை சிறுமியின் பெற்றோர் கவனித்துள்ளனர்.

died

இதனால் பதறிய நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், சார்ச் போட்டபடி பாடல்கள் கேட்டுக் கொண்டு தூங்கியபோது வெப்பம் தாங்காமல் பேட்டரி வெடித்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் மயங்கிய நிலையில் இருந்ததால் சிறுமி இறந்துவிட்டார் என தெரிய வந்தது.

தங்களது ஒரே மகளை இழந்த சிறுமியின் பெற்றோர் செய்வதறியாது வருத்தத்தில் உள்ளனர். இது தங்களுக்கு ஒரு பாடமாகவும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் என குறிப்பிட்டனர்.

-vicky