செல்போனில் மருத்துவம் பார்த்த பெண் மருத்துவர்: இரட்டை சிசுக்கள் பலி!

 

செல்போனில் மருத்துவம் பார்த்த பெண் மருத்துவர்: இரட்டை சிசுக்கள் பலி!

கடந்த 5 மாதங்களாக விஜயலட்சுமி அங்கேயே பலலட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், பூண்டி கல்லூரி சாலையை சேர்ந்தவர்  குமரவேல். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் தஞ்சை அபி அண்ட் அபி மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு  மருத்துவர் ராதிகா ராணியின் சிகிச்சையால் விஜயலட்சுமி கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. மேலும் வயிற்றில் இரட்டை சிசுக்கள் இருந்ததால் கடந்த 5 மாதங்களாக விஜயலட்சுமி அங்கேயே பலலட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ttn

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று விஜயலட்சுமிக்கு இடுப்பு வலி  ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது மருத்துவர் ராதிகா ராணி குழந்தை நன்றாக இருக்கிறது இருப்பினும் சிகிச்சைக்கு அனுமதிக்கும்படியும் அறிவுரை வழங்கி விட்டு சென்னைக்கு  புறப்பட்டு சென்றுள்ளார். 

ttn

இதையடுத்து விஜயலட்சுமிக்கு வலி குறையாததால் செவிலியர்கள் மருத்துவர் ராதிகா ராணியை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் செல்போனிலேயே சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனைகள் கூற வலி இன்னும் அதிகமாகியுள்ளது. இதை தொடர்ந்து ராதிகாராணி, தனக்கு தெரிந்த மற்றொரு மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்க கூறியுள்ளார்.அவர் சோதித்து  பார்த்த போது  இரட்டை சிசுக்கள் இறந்து விட்டது தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம், சிசுக்களை வெளியில் எடுத்து விஜயலட்சுமியை காப்பாற்றியுள்ளார் அந்த மருத்துவர்.

pregnant

ராதிகா ராணியின் அலட்சியமான பொறுப்பற்ற செயலால் தான் குழந்தைகள் இறந்து விட்டதாக விஜயலட்சுமி குடும்பத்தினர் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.