செல்பி கேமராவுக்காக டிஸ்பிளேவில் ஹோல் வசதி கொண்ட ஹுவாய் நோவா 4 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு

 

செல்பி கேமராவுக்காக டிஸ்பிளேவில் ஹோல் வசதி கொண்ட ஹுவாய் நோவா 4 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஹுவாய் நிறுவனத்தின் நோவா 4 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: ஹுவாய் நிறுவனத்தின் நோவா 4 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனில் செல்பி கேமராவுக்காக அதன் டிஸ்பிளேவில் ஹோல் வசதி இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அத்தகைய அம்சம் கொண்ட டிஸ்பிளே மாடல் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே என்று அழைக்கப்படுகிறது. தற்போது அதே டிஸ்பிளே வடிவமைப்பில் ஹுவாய் நிறுவனம் தனது நோவா 4 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, வருகிற டிச.17-ஆம் தேதி சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நோவா 4 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் இதில் மூன்று கேமரா செட்டப், கிரின் 980 பிராசசர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, இன்டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சாம்சங் நிறுவனம் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே மாடல் ஸ்மார்ட்போனை முதலில் அறிமுகம் செய்வதாக இருந்தது. ஆனால் நோவா 4 ஸ்மார்ட்போன் மூலம் ஹூவாய் நிறுவனம் முந்திக் கொண்டு விட்டது.