‘செல்ஃபி எடுக்க வரி கட்டணும்! ட்ரெண்டாகும் செல்ஃபி ஸோன்!

‘செல்ஃபி எடுக்க வரி கட்டணும்! ட்ரெண்டாகும் செல்ஃபி ஸோன்!

வீட்டிற்கு வீடு கியாஸ் அடுப்பு இருக்கிறதோ இல்லையோ, வீட்டில் இருக்கும் நபர்களை விட செல்போன்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வீட்டிலும் அதிகமானதாகவே இருக்கிறது. வண்டி ஓட்டிக் கொண்டே செல்ஃபி எடுப்பது, குளத்தடியில் செல்ஃபி எடுப்பது, மலை உச்சியில் செல்ஃபி எடுப்பது என்று சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களை அள்ளிக் குவிப்பதற்காக செல்ஃபி புகைப்படங்களுக்கு சாகசம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், செல்ஃபி புகைப்படங்களை எடுப்பதற்கு வரியை தனியாக விதித்திருக்கிறது கிராம பஞ்சாயத்து. கோவாவில் தான் இது தற்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது. கோவாவில், மறைந்த முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் தொகுதியிலுள்ள பர்ரா என்ற கிராமத்தில் தான் இந்த வரி விதிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

selfie

பர்ரா கிராமம் பச்சை பசேலென பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும். சுற்றிலும் தென்னஞ்சோலைகள், சாலைகளின் இருபுறங்களிலும் எல்லை கற்களைப் போல வழி நெடுகிலும் தென்னை மரங்கள் என அந்த கிராமத்தில் எந்த இடத்திலும் நின்று வளைத்து வளைத்து செல்ஃபி புகைப்படங்களை எடுத்து தள்ளலாம். இந்த இயற்கை காட்சிகளுக்காகவே சுற்றுலா பயணிகள் தினந்தோறும் இந்த கிராமத்தில் குவிந்து வருகிறார்கள். பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என்று பல திரைப்பட ஷூட்டிங்குகளும் இங்கு நடைபெறுவது வழக்கம். இதை எல்லாம் பார்த்து வந்த அந்த கிராமத்தின் பஞ்சாயத்தில், தற்போது  புகைப்படங்களை எடுப்பதற்கு ரூ.500 வரையில் வரியாக விதித்துள்ளனர். இது தற்போது விவாத பொருளாக அந்த பகுதியில் இருந்து வந்தாலும், பலரும் ரூ.500 கொடுத்து, விதவிதமான செல்ஃபி படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறார்கள்.