செல்ஃபி எடுக்க முயன்று சுழலில் சிக்கிய மாணவனை தேடும் பணி தீவிரம்!

 

செல்ஃபி எடுக்க முயன்று சுழலில் சிக்கிய மாணவனை தேடும் பணி தீவிரம்!

குடும்பத்துடன் அருவிக்கு சென்ற மாணவன் சுழலில் சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தீவிரத்தின் காரணமாக கடந்த 14 ஆம் தேதி வரை இருந்த ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். பள்ளிக் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அவரது குடும்பங்களுடன் விடுமுறையை கழித்து வருகின்றனர்.  இந்நிலையில், குடும்பத்துடன் அருவிக்கு சென்ற மாணவன் சுழலில் சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

ttn

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் பகுதியில் வசித்து வரும் தம்பதி ஸ்ரீதரன்- சங்கீதா. இவர்களுக்கு அகில், நிகில் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேரும் மரப்பாலம் அருவிக்கு அவர்களது உறவினர்களுடன் சென்றுள்ளார். அப்போது நிகில் ஆற்றுக்குள் சென்று செல்பி எடுக்க முயன்ற, எதிர்பாராத விதமாக சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறார். இதில், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக குன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர், நிகிலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சுழல் அதிகமாக இருந்ததால் நிகிலை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் நெடு நேரம் ஆகியும் தேடுதல் பணி தொடர்ந்துள்ளது. இதனிடையே இருள் சூழ்ந்து கொண்டதால் நிகிலை தேடும் பணி நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது.