செருப்பு போட மாட்டேன்… தி.மு.க நிர்வாகியின் சபதத்தை முடித்து வைப்பாரா ஸ்டாலின்?

 

செருப்பு போட மாட்டேன்… தி.மு.க நிர்வாகியின் சபதத்தை முடித்து வைப்பாரா ஸ்டாலின்?

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். தி.மு.க-வின் அதிதீவிர விசுவாசி. வீரளுர் தி.மு.க செயலாளராகவும் உள்ளார். ஒரு காலத்தில் கலசபாக்கம் தொகுதி தி.மு.க-வின் கோட்டையாக இருந்தது. ஆனால் தற்போது 2001க்குப் பிறகு இந்த தொகுதியில் தி.மு.க-வால் வெற்றி பெற முடியவில்லை.

தி.மு.க வெற்றி பெறும் வரை செருப்பு போட மாட்டேன் என்று சபதம் போட்டுள்ள தி.மு.க தொண்டர் பற்றி செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

stalin-dmk-09

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். தி.மு.க-வின் அதிதீவிர விசுவாசி. வீரளுர் தி.மு.க செயலாளராகவும் உள்ளார். ஒரு காலத்தில் கலசபாக்கம் தொகுதி தி.மு.க-வின் கோட்டையாக இருந்தது. ஆனால் தற்போது 2001க்குப் பிறகு இந்த தொகுதியில் தி.மு.க-வால் வெற்றி பெற முடியவில்லை. கடந்த நான்கு தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றுள்ளது. கடந்த நான்கு தேர்தல்களிலும் இந்த தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் தி.மு.க வெற்றி பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் காளியப்பனிடன் மாற்றக் கட்சியினர் இது பற்றிப் பேசி கிண்டல் செய்துள்ளனர். இதனால் வெறுப்படைந்த காளியப்பன் கலசபாக்கம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் நின்று வெற்றி பெறும் வரை காலில் செருப்பணியமாட்டேன் என்று சபதம் போட்டுள்ளார். ஒன்பது ஆண்டுகளாக இவர் செருப்பு அணியாமல் உள்ளார்.

 

kalasapakkam

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கலசபாக்கத்தை தி.மு.க-வே கைப்பற்றியது. கலசபாக்கம் ஒன்றியக் குழு உறுப்பினராக காளியப்பனும் வெற்றி பெற்றுள்ளார். இதனால், சபதத்தை முடித்து செருப்பு அணிந்துகொள்ளும்படி முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ-வாக தி.மு.க-வைச் சேர்ந்தவர் ஒருவர் வரும் வரை என்னுடைய சபதம் தொடரும் என்று கூறிவிட்டாராம். காளியப்பனுக்காகவாவது இந்த முறை கலசபாக்கம் தொகுதியில் தி.மு.க-வே போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்களாம் மாவட்ட நிர்வாகிகள்.