செய்யாத தவறுக்கு சூடு வைத்த பணக்காரத் திமிர் ! உயிருக்கு போராடும் சிறுமி !

 

செய்யாத தவறுக்கு சூடு வைத்த பணக்காரத் திமிர் ! உயிருக்கு போராடும் சிறுமி !

ஜார்கண்ட் மாநிலத்தில் 200 ரூபாய் திருடியதாகக் கூறி சிறுமிக்கு சூடு வைத்து வீட்டின் பின்புறம் தூக்கி வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

18 வயதுக்கு உட்பட்டவர்களை வேலைக்கு வைக்கக்கூடாது என தொழிலாளர் நல சட்டம் கூறுகிறது. இது குறித்து பல்வேறு பிரச்சாரங்களும், திடீர் ஆய்வுகளும் அவ்வப்போது ஆலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. அப்படி யாரேனும் சிறுவர்களை பணி அமர்த்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதைய வலியுறுத்தினாலும் தங்கள் வீடுகளில் வேலைக்கு வைத்திருப்பவர்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தானா என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக விடை இல்லை. இன்றும் தங்கள் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு விடுமுறை நாட்களில் பட்டாசு தொழில்களுக்கு செல்லும் சிறுவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்நிலையில் ஜார்கண்ட் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான ராகேஷ்குமார் வீட்டில் சிறுமி வீட்டு வேலை செய்துவந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டில் 200 ரூபாய் காணாமல் போய் உள்ளது.

Child Got Injured

இதுகுறித்து ராகேஷ்குமார் சிறுமியிடம் கேட்டுள்ளார். அந்த குழந்தை இல்லை என மறுப்பு தெரிவித்தபோதும் இரும்புக் கம்பி ஒன்றை அடுப்பில் வைத்து ஏதும்அறியா அந்த குழந்தைக்கு சூடு வைத்துள்ளார். முகம், மார்பு பகுதியில் வைத்த சூட்டை தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார் அந்த சிறுமி.

இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ் குமாரின் மனைவி சிறுமியை வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒதுக்கு புறத்தில் வீசியுள்ளார். சுயநினைவை இழந்து கிடந்த சிறுமியை பார்த்த அக்கம் பக்கத்தினர் பெற்றோர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதனால் பயந்து போன அரசு ஊழியர் எங்கே தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து சிறுமியின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதை சிறுமியின் பெற்றோர் வாங்க மறுத்துள்ளனர். தங்களது மகளுக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.