செயற்கை சூரியன்; பணிகளை நிறைவு செய்யும் சீனா!

 

செயற்கை சூரியன்; பணிகளை நிறைவு செய்யும் சீனா!

சீனாவின் இயற்பியல் ஆய்வகம் ஒன்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கி வரும் செயற்கை சூரியனின் தயாரிப்புப் பணிகள் இந்த ஆண்டுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பீய்ஜிங்: சீனாவின் இயற்பியல் ஆய்வகம் ஒன்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கி வரும் செயற்கை சூரியனின் தயாரிப்புப் பணிகள் இந்த ஆண்டுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்தால், அவை மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. அணுக்கரு இணைவு என்றழைக்கப்படும் அந்த செயல்முறை மூலமாகத் தான் ஒளி மற்றும் வெப்ப ஆற்றல்களை சூரியன் உருவாக்குகிறது. அந்த ஆற்றல்களை செயற்கையாக பூமியில் உருவாக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் நீண்ட நாள் கனவாகும்.

artificial sun

இந்த கனவுக்கு செயல்வடிவம் கொடுக்க முயன்ற சீன ஆய்வாளர்கள்,  Experimental Advanced Superconducting Tokamak (EAST) reactor என்ற அணுக்கரு உலையை உருவாக்கினார்கள். இதன் மூலம் அணுக்கரு இணைப்பை ஏற்படுத்தி, எச்.எல்.2-எம் என்ற செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சில் அவர் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இந்த பணிகள் இந்த ஆண்டுடன் நிறைவடையும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

artificial sun

நம்முடைய வானத்திலுள்ள சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ் மட்டுமே கொண்டதாகும். ஆனால், இந்த செயற்கை சூரியன், உண்மையான சூரியனை விட 6 மடங்கு அதிக வெப்பமானது. அதாவது; 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டது.

அணுக்கரு இணைப்பில் ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது. அது எவ்வளவு நேரம் அணுக்கரு இணைப்பை நீடிக்கச் செய்ய முடியும் என்பதுதான். இதற்குமுன் அதிக நேரம் நீடித்த அணுக்கரு இணைப்பு வேதிவினை, பிரான்சில் உள்ள அணு உலை ஒன்றில் நிகழ்த்தப்பட்டது, 2003-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு 6 நிமிடங்கள் 30 விநாடிகள் நீடித்தது.

artificial sun

இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளின் படி, ஒரு பொருள்  திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று இயல்பான தனி நிலைகளுக்குப் புறம்பாகவுள்ள நான்காவது ஒரு தனி நிலை பிளாஸ்மா ஆகும். இதனை புவியில் இயல்பான நிலைகளினின்று செயற்கை முறையில் பெறப்பட்ட நடுநிலையான வாயுக்கலவை மூலமே பெற இயலும். செயற்கை சூரியனானது, நிலையான பிளாஸ்மாவைக் கட்டுப்படுத்த காந்தப் புலங்களைப் பயன்படுத்தும் சாதனமாகவும் இருக்கிறது. இது அணுக்கரு இணைவில் பயன்படும். அதன் மூலம் நிலையான அணுக்கரு இணைவு என்பது சாத்தியப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.