செம்மலை அடித்ததால், திமுகவில் சேர்ந்த அதிமுக நிர்வாகி: அதிமுகவில் பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு!

 

செம்மலை அடித்ததால், திமுகவில் சேர்ந்த அதிமுக நிர்வாகி: அதிமுகவில் பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு!

அன்புமணியைப் பார்த்து கேள்வி எழுப்பிய அதிமுக நிர்வாகியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை வாயில் அடித்ததால் அவர் திமுகவில் இணைந்துள்ளார். 

ஒமலூர்: அன்புமணியைப் பார்த்து கேள்வி எழுப்பிய அதிமுக நிர்வாகியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை வாயில் அடித்ததால் அவர் திமுகவில் இணைந்துள்ளார். 

anbumani

வருகின்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இதன் காரணமாகக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து, ஒமலூர் அருகே சிந்தாமணியூர் பகுதியில்  கடந்த 31 ஆம் தேதி மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை பிரச்சாரம் செய்தார். 

 

அப்போது கூட்டத்திலிருந்த அதிமுக கிளைச்செயலாளர் செந்தில்குமார் என்பவர், ‘5 ஆண்டுகள் இங்கு வரவேயில்லை எம்பியாக தொகுதிக்கு என்ன செய்தீர்கள்’ என்று கேள்வி கேட்க, இதனை சற்றும் எதிர்பாராத  செம்மலை,கேள்வி கேட்ட அதிமுக நிர்வாகியின்  வாயில் அடித்தார். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் மற்றும் தொண்டர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

mk

இந்நிலையில், செம்மலை எம்.எல்.ஏவிடம் அடி வாங்கிய அதிமுக நிர்வாகி செந்தில்குமார்  திமுகவில் இணைந்துள்ளார். திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன்முன்னிலையில் செந்தில்குமார் உட்பட சுமார் 500 பேர் கட்சியில் இணைந்தனர்.

அதிமுகவில் தொண்டர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதால் திமுகவில் இணைந்ததாகச் செந்தில்நாதன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: கோவை சிறுமி வழக்கு: போலீசாரை மீறி குற்றவாளியை அடித்து உதைத்த மக்கள்! கோவையில் பரபரப்பு!