செப்டம்பர் மாதத்துக்கு பிறகுதான் எல்.ஐ.சி. பங்கு விற்பனை….. ரூ.90 ஆயிரம் கோடி கிடைக்கும்…. மத்திய அரசு போடும் கணக்கு…..

 

செப்டம்பர் மாதத்துக்கு பிறகுதான் எல்.ஐ.சி. பங்கு விற்பனை….. ரூ.90 ஆயிரம் கோடி கிடைக்கும்…. மத்திய அரசு போடும் கணக்கு…..

இந்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் (அக்டோபர்-மார்ச்) எல்.ஐ.சி. பங்கு விற்பனை நடைபெறும் என மத்திய நிதித்துறை செயலளர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி. மத்திய அரசு சொந்தமானது. இந்நிறுவனத்தில் 100 சதவீத மூலதனத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. மத்திய அரசுக்கு வருவாயை அள்ளிக் கொடுக்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்று எல்.ஐ.சி. இந்நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன்

எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியான உடனே பல்வேறு தரப்பினரும் புருவத்தை உயர்த்தினர். நல்ல லாபத்தை கொடுக்கும் எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை மத்திய அரசு ஏன் விற்பனை செய்யப்போகிறது என கேள்வி எழுந்தது. அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான நிதியை திரட்டும் நோக்கத்தில்தான் மத்திய அரசு எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை எடுத்துள்ளது.

ராஜீவ் குமார்

எல்.ஐ.சி. பங்கு விற்பனை குறித்து மத்திய நிதித்துறை செயலளர் ராஜீவ் குமார் கூறுகையில், எல்.ஐ.சி.யை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதால் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இருக்கும் மற்றும் பங்குச் சந்தையில் பொது மக்கள் பங்கேற்பை ஆழப்படுத்தும். எல்.ஐ.சி. பங்கு விற்பனை இந்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் நடைபெறும். எல்.ஐ.சி.யின் பத்து சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும். ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்த நிதியாண்டில் மத்திய அரசு பங்கு விற்பனை வாயிலாக ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் எல்.ஐ.சி.யை பட்டியலிடுவது மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கி பங்குகளை விற்பனை வாயிலாக ரூ.90 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.