செப்டம்பர் மாதத்துக்குள் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி ரெடியாகி விடும்…நம்பிக்கை கொடுக்கும் இங்கிலாந்து பேராசிரியர்…

 

செப்டம்பர் மாதத்துக்குள் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி ரெடியாகி விடும்…நம்பிக்கை கொடுக்கும் இங்கிலாந்து பேராசிரியர்…

செப்டம்பர் மாதத்துக்குள் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி ரெடியாகி விடும் என இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ துறை பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவாகி உலகையே ஆட்டி படைத்து வருகிறது தொற்று நோய் கொரோனா வைரஸ். உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கி விட்டது. மேலும் இந்த தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி விட்டது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸை குணப்படுத்தும் எந்தவொரு மருந்தும் மற்றும் சிகிச்சையும் இதுவரை கண்டுபிடிக்காததால், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்போர் எண்ணிக்கை மேலும் கடுமையாக அதிகரிக்கும் என அச்சம் உலகம் நாடுகளின் மத்தியில் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விடும் என இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் சாரா கில்பர்ட்

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் சாரா கில்பர்ட் தலைமையில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஒரு குழு ஈடுபட்டு வருகிறது. இந்த குழு கொரோனா எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பேராசிரியர் சாரா கில்பர்ட் பேட்டி ஒன்றில், இலையுதிர் காலத்துக்குள் எனது குழுவின் முன்னேற்றங்கள் (கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி கண்டுபிடிப்பு) தயாராக இருக்கும். குறிப்பாக செப்டம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு தயாராகி விடும். அடுத்த சில வாரங்களில் தடுப்பூசியின் மனித பரிசோதனைகள் தொடங்கி விடும் என தெரிவித்தார்.