சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை : சென்னை விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு டெல்லி விமான நிலைய தகவல் அறையிலிருந்து  எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில்,  சென்னை விமான நிலையத்திலிருந்து சவூதி செல்லும் பெண் வெடிகுண்டை  உடலில் கட்டிக்கொண்டு செல்வதாகத் தகவல் வந்துள்ளது. 

 

airport

இந்நிலையில்  பயணிகளிடம் சோதனையைத் தீவிரப்படுத்திய அதிகாரிகள் நள்ளிரவில் அவசரமாகப் பாதுகாப்பு ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.