சென்னை வந்த ரயிலில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல்; ஹோட்டல்களுக்கு சப்ளை?

 

சென்னை வந்த ரயிலில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல்; ஹோட்டல்களுக்கு சப்ளை?

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் 1000 கிலோ நாய் கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் 1000 கிலோ நாய் கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், முறையாக பதப்படுத்தப்படாத ஆட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சென்னை வந்த அந்த ரயிலில் இருந்து இறக்கி வைக்கப்பட்டிருந்த பல்வேறு சரக்குகளை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருந்த இறைச்சியை ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் தன்மையை கொண்டு அது நாய் இறைச்சி என கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து, ராஜஸ்தானில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெயரில் வந்த 1000 கிலோ நாய் கறியை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் உள்ள நட்சத்திர மற்றும் தனியார் ஹோட்டல்களில் ஏற்கனவே நாய் கறி பரிமாறப்படுவதாக புகார் வந்துள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட நாய் கறி யாருக்கு அனுப்பப்பட்டது? நட்சத்திர ஹோட்டல்களுக்கு நாய் கறி விற்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.