சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியில் இருந்த பெண்ணுக்கு கொரோனா! அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 250 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 மருத்துவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி 411 பேர் கொரோனாவிலிருந்து சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக இருந்த 47 வயது பெண்ணுக்கு தொற்று உறுதியானதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டிலுள்ள 3 வயது குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அனைவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பெண் எண்ணூர் சத்தியவாணி முத்து நகரை சேர்ந்தவராவர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது.