சென்னை மெட்ரோ ரெயிலில் இனி சினிமா, சீரியல் பார்க்கலாம் – விரைவில் புதிய வசதி அறிமுகம்!

 

சென்னை மெட்ரோ ரெயிலில் இனி சினிமா, சீரியல் பார்க்கலாம் – விரைவில் புதிய வசதி அறிமுகம்!

மெட்ரோ ரெயிலில் சுகர் பாக்ஸ் என்ற ஆப் மூலம் திரைப்படங்கள், சீரியல்கள் பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னை: மெட்ரோ ரெயிலில் சுகர் பாக்ஸ் என்ற ஆப் மூலம் திரைப்படங்கள், சீரியல்கள் பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் பாதையின் நீளம் 45 கி.மீ தூரமாகும். இதைக் கடக்க ஆகும் மொத்த நேரம் தோராயமாக 40 நிமிடங்கள் ஆகிறது. இந்த பயண நேரத்தில் பயணிகள் அலுப்பில்லாமல் செல்ல சுகர் பாக்ஸ் என்ற அமைப்பை மெட்ரோ ரெயிலில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் சுகர் பாக்ஸ் என்ற மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள், சீரியல்களை பார்த்து ரசிக்க முடியும்.

ttn

ரெயிலில் வழங்கப்பட்டுள்ள வைஃபை மூலம் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் பயணிகள் இந்த ஆப்-இல் வீடியோக்களை பார்க்கலாம். வெறும் 10 நிமிடங்களில் திரைப்படத்தை டவுன்லோடு செய்து கொள்ளக் கூடிய வகையில் சுகர் பாக்ஸ் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளை மகிழ்விக்கவும், மெட்ரோ ரெயிலை பயன்படுத்த ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.