சென்னை முழுவதும் 233 இடங்களுக்கு சீல் வைப்பு!

 

சென்னை  முழுவதும் 233 இடங்களுக்கு சீல் வைப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் இதுவரை சென்னையில் மட்டுமே  906 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.  குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் என்றும் இல்லாத படி   நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் இதுவரை சென்னையில் மட்டுமே  906 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

அதிகபட்சமாக திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – 77, கோடம்பாக்கம் – 97, அண்ணா நகர் – 86 என மேற்கூறிய 6 மண்டலங்களில்  கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி உள்ளது. 

ff

வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது என்றும் சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள 3 மண்டலங்களில் 10 நாட்களில் கொரோனா பரவல் குறைய வாய்ப்பு  இருக்கிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

ff

இந்நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி அதிகரித்துள்ளது. மேலும் மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.