சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்படும் சொத்துவரி?

 

சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்படும் சொத்துவரி?

சொத்துவரி உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யும் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சொத்துவரி உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யும் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி விதிக்க விதிகளை வகுக்கக்கோரி வழக்கறிஞர் வி.பி.ஆர் மேனன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன், சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது குறித்து 30 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக ₹ 400 கோடி மதிப்பில் மேற்கொள்ளபட உள்ள திட்டத்திற்கு 30 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்தது. அதுமட்டுமின்றி, இரண்டாவது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ₹ 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் மத்திய வீட்டு வசதி துறை செயலாளர் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 27 க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.