சென்னை மாதவரம் தற்காலிக மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: காணாமல் போன தனிமனித இடைவெளி!

 

சென்னை மாதவரம் தற்காலிக மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: காணாமல் போன தனிமனித இடைவெளி!

இயங்கி வந்த பழம் , பூ அங்காடிகள் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பழம் , பூ அங்காடிகள் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து 40 அரங்குகள்  அமைக்கப்பட்டு  பூ மற்றும் பழ அங்காடிகள் அமைக்கபட்டு இன்று அதிகாலை முதல் இயங்க ஆரம்பித்தது. இதன் காரணமாக பொதுமக்களும் குறு  வியாபாரிகள் ஏராளமானோர் அதிகாலை முதலே வருகை தருகின்றனர். 

tt

விவசாயிகள் கொண்டு வந்த பூக்களையும், பழங்களையும் மக்களும், சிறு வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.  

r

தமிழகத்தில் மேலும் 161பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,323ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்காமல்  மக்கள் கூட்டம் அலைமோதுவதாக பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.