சென்னை நதிகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

 

சென்னை நதிகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டது. இதைச் சரிசெய்ய அரசு தரப்பிலோ அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

சென்னை: 100 கோடி அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை கோரிய தமிழக அரசின் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறி விட்டது அதனால் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்படச் சிலர் மனு தாக்கல் செய்தனர்.

national tribunal

இந்த மனுக்கள், தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வில் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டது. இதைச் சரிசெய்ய அரசு தரப்பிலோ அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு கூவம் போன்ற ஆறுகளைச் சீரமைக்க 104 கோடி  ரூபாய் நிதியளித்தது. இருப்பினும் அதைச் சரிவரச் செய்ய அரசு தவறிவிட்டது. மாநில அரசின் தோல்வியைக் கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும். இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டது. 

sec

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத்  தடை கோரி  தமிழக அரசு சார்பில்  சென்னை  உயர்நீதிமன்றத்தில்   மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.