சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு பரவிய கொரோனா தொற்று!

 

சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு பரவிய கொரோனா தொற்று!

25% பேர் முகக்கவசம் அணிவதில்லை. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளன” என்றார். 

இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு 37,776 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் ஆங்காங்கே தென்பட்ட கொரோனா பாதிப்பு, ஏப்ரல் 24ஆம் தேதி உச்சத்தை அடைந்துள்ளது. இதுவரை  1257 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

rr

கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரியான  ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். சென்னையில் நோய் கட்டுப்பாடுப் பகுதிகளில் 25% பேர் முகக்கவசம் அணிவதில்லை. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளன” என்றார். 

rr

தொடர்ந்து பேசிய அவர்”நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது.  சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் “என்று கேட்டுக்கொண்டார்.