சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா தொற்று

 

சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2500-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1200 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று 98 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28-ஆக இருந்தது. இந்நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர் ஒருவரின் தாயார் (வயது 77) இன்று காலை கொரோனாவால் உயிரிழந்தார். மூதாட்டியின் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.

chennai

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் 40 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வடக்கு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.