‘சென்னை’ தான் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம்: காவல் ஆணையர் பெருமிதம்

 

‘சென்னை’ தான் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம்: காவல் ஆணையர் பெருமிதம்

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் குறைவாக உள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் பெண்களுக்காகப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கலந்து கொண்டார். அதில் பேசிய காவல்துறை ஆணையர், பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய காவலன் SOS செயலி பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். 

ttn

அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடம் சென்னை தான். தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் குறைவாக உள்ளது. தற்போதைய டிஜிட்டல் கால கட்டத்தில் வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத நபர்களுடன் பேச வேண்டிய சூழல் ஏற்படுகிறது. முகம் தெரியாத நபர்களிடம் பெண்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. சமூக வலைத்தளங்களைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று தெரிவித்தார். 

tn

மேலும், பெண்களுக்காகக் காவலன் SOS செயலியுடன் சேர்த்து, புதிய தொலைபேசி எண்ணையும் உருவாக்க உள்ளோம். அந்த எண்களின் மூலம் எந்தெந்த இடங்களில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது போல எண்ணுகிறார்களோ அந்த இடங்களைக் குறித்து பெண்கள் அந்த தொலைபேசி எண்ணின் மூலம் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.