சென்னை, டெல்லி உள்பட 15 மாவட்டங்களை கட்டம் கட்டிய மத்திய அரசு…. தீவிரமடையும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம்…..

 

சென்னை, டெல்லி உள்பட 15 மாவட்டங்களை கட்டம் கட்டிய மத்திய அரசு…. தீவிரமடையும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம்…..

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலின் அடிப்படையில் சென்னை, டெல்லி, மும்பை உள்பட 15 மாவட்டங்களை சிக்கலான மாவட்டங்களாக மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் அடிப்படையில், அதிக பாதிப்புள்ள முதல் 15 மாவட்டங்கள் பட்டியலில் டெல்லி, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், இந்தூர், அகமதாபாத், மும்பை, வதோதரா, சூரத், குர்னால், போபால், ஜோத்பூர், ஆக்ரா, தானே மற்றும் சென்னை ஆகிய இடம் பிடித்துள்ளன. இதில், டெல்லி, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், இந்தூர், அகமதாபாத் மற்றும் மும்பை ஆகியவை ‘உயர்நிலை சுமை’ மாவட்டங்கள் என குறிக்கப்பட்டுள்ளது.

சென்னை

அதேசமயம் வதோதரா, சூரத், கர்னூல், போபால், ஜோத்பூர், ஆக்ரா, தானே மற்றும் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களும் ‘ சிக்கலான மாவட்டங்கள்’ என குறிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்த மதிப்பீடு, கொடிய தொற்று நோயான கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் தீர்க்கமான போராட்டத்தை தெளிவுபடுத்துகிறது.

அமிதாப் காந்த்

இந்த 15 மாவட்டங்கள் தொடர்பாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் டிவிட்டரில், நாடு கொந்தளிப்பான நேரத்தை கடந்து செல்கிறது. கோவிட்-19க்கு எதிரான நமது போராட்டத்தில் இந்த 15 மாவட்டங்களும் முக்கியமானவை. அதில் 7 மாவட்டங்கள் குறிப்பாக உயர்நிலை அளவைக் காட்டுகின்றன. கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் வெற்றி அவற்றை சார்ந்து உள்ளது. இந்த மாவட்டங்களில் நாம் தீவிரமாக கண்காணிக்க  வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும், சோதிக்க வேண்டும் மற்றும் சிகிச்சையளிக்க வேண்டும். நாம் இங்கே கட்டாயம் வெல்ல வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.