சென்னை சிறுசேரி – மாமல்லபுரம் இடையே ஆறு வழி சாலை! – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

 

சென்னை சிறுசேரி – மாமல்லபுரம் இடையே ஆறு வழி சாலை! – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சட்டப்பேரவையில் இன்று பொதுப் பணித் துறை சார்பில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை சிறுசேரி – மாமல்லபுரம் இடையேயான சாலை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பொதுப் பணித் துறை சார்பில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

“சென்னை சிறுசேரி – மகாபலிபுரம் வரை 14.8 கி.மீ தூர சாலை ஆறுவழிச் சாலையாக ரூ. 350 கோடியில் மேம்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கால்வாய்கள், அரியலூர் மாவட்டத்தில் பாலம் கட்ட ரூ.63.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள்கோவில் வரை வாகன சுரங்கப்பாதை உள்ளிட்ட பணிகள் ரூ. 531 கோடியில் மேற்கொள்ளப்படும்.

15 மாவட்டங்களில் 40 இடங்களில் ரூ.834.83 கோடியில் பாசன புனரமைத்தல், நவீனப்படுத்துதல் பணி மேற்கொள்ளப்படும்.

முதல்வர் பழனிசாமி

அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணைக்கு அருகே ரூ. 650 கோடியில் நீரொழுங்கி அமைக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிபட்டி மற்றும் மொரப்பூர் வட்டங்களில் ரூ.300 கோடியில் ஏரி, குளங்கள் நிரப்பத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நாகை மாவட்டத்தில் புதிய நீரொழுங்கிகள் மற்றும் கடைமடை தடுப்பணைகள் ரூ.87 கோடியில் அமைக்கப்படும்

ரூ. 361 கோடியில் ஒசூர், திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளில் தொழிற்சாலைகள் இணைக்கும் சாலைகள் மேம்படுத்தப்படும்” என்றார்.