சென்னை கோயம்பேடு சந்தையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்த இளைஞருக்கு கொரோனா உறுதி

 

சென்னை கோயம்பேடு சந்தையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்த இளைஞருக்கு கொரோனா உறுதி

சென்னை கோயம்பேடு சந்தையில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 1154 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 9000 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

ttn

தமிழகத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2300-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1200 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து வந்த மதுரவாயலை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் வேலை பார்த்து வந்த கடைக்கு வந்தவர்களை கண்டுபிடிக்கும் பணியிலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இதுவரை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 35 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.