சென்னை குடிசை பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு மாஸ்க் வழங்கப்படும்- அமைச்சர் வேலுமணி

 

சென்னை குடிசை பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு மாஸ்க் வழங்கப்படும்- அமைச்சர் வேலுமணி

சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் 5,000ஐ நெருங்கிக் கொண்டே வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ எட்டியுள்ளது. இந்த அளவிற்கு கொரோனா வைரஸ் தீவிரமாகிக் கொண்டே வந்து கொண்டிருப்பினும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை தமிழகத்தில் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் 5,000ஐ நெருங்கிக் கொண்டே வருகிறது. 

ttn

இந்நிலையில் நேற்று தலைமை செயலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்தது. அதில் பேசிய அமைச்சர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசை பகுதிகளில் நாளை முதல் முகக் கவசம் விநியோகம் செய்யப்படும் என்றும்  குடிசை பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், ஒருவருக்கு 2 முகக்கவசம் வழங்கப்படும் என்றும் மறுபயன்பாட்டுடன் கூடிய துணியால் ஆன மாஸ்க்குகள் தான் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.